Published on 03/09/2020 | Edited on 03/09/2020

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தவேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கீழமை நீதிமன்றங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும், சாட்சிகளுக்கும் மட்டும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவர். நீதிமன்ற வளாகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய, முதன்மை நீதிபதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்ற பணிகள் குறித்து செப்டம்பர் 22- ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.