ADVERTISEMENT

தமிழக கேரள நல்லுறவை பறைசாற்றும் திருவானந்தபுர அரண்மனை நவராத்ரி விழா ஊர்வலம் குமரியில் தொடக்கம்!!

12:40 PM Oct 07, 2018 | manikandan

திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கும் நவராத்திாி விழாவுக்காக குமாி மாவட்டத்தில் இருந்து சாமி விக்ரகங்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT

குமாி கேரளா நல்லுறவுக்கு எடுத்துகாட்டாக ஆண்டுத்தோறும் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திாி விழாவுக்கு குமாி மாவட்டம் சுசிந்திரம் கோவிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகமும், வேளிமலை குமாரகோவில் முருகன் விக்ரகமும், பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் விக்ரகமும் பல்லாக்கில்ஊா்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு நவராத்திாி விழா 10-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதற்காக சாமி விக்ரகங்கள் புறப்பாடு நிகழ்ச்சி இன்று காலை 7.30 மணிக்கு பத்மனாபபுரம் அரண்மனையில் நடந்தது. இதில் மத்திய இணை மந்திாி பொன் ராதாகிருஷ்ணன், கேரளா தொல்லியல் துறை மந்திாி கடனப்பள்ளி ராமசந்திரன், அறிலையத்துறை மந்திாி கடகம்பள்ளி சுரேந்திரன், மாவட்ட கலெக்டா் பிரசாந்த் வடநேரா, எஸ்.பி. ஸ்ரீநாத், தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ், உட்பட அதிகாாிகள் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக முக்கிய நிகழ்வாக தினம்தோறும் பூஜை நடத்தப்படும் மன்னா் உடைவாழ் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பூஜையில் இருந்த வாளை கேரளா தொல்லியல் துறையினா் குமாி மாவட்ட தேவசம் போா்டு இணை ஆணையா் அன்புமணியிடம் ஓப்படைத்தா். இதை தொடா்ந்து சாமி விக்ரகங்கள் பல்லாக்கில் ஊா்வலமாக திருவனந்தபுரம் நோக்கி சென்றது. அப்போது வழி நெடுகிலும் பொது மக்கள் மலா்தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனாா்.

சாமி விக்ரகங்கள் ஊா்வலத்தில் கேரளா மற்றும் குமாி போலிசாா் நூற்றுக்கு மேற்பட்டோா் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த சாமி விக்ரகங்கள் 9-ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. 10-ம் தேதி துவங்கும் நவராத்திாி பூஜையில் சரஸ்வதி தேவி விக்ரகம் கோட்டைக்கம் நவராத்திாி கொலு மண்டபத்திலும் குமாரகோவில் முருகன் விக்ரகம் ஆாியசாலை கோவிலிலும் சுசிந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் செந்திட்டை பகவதி கோவிலிலும் வைக்கப்படுகிறது.பின்னா் 19-ம் தேதி நடக்கும் விஜயதசமிக்கு பிறகு சாமி விக்ரகங்கள் 21-ம் தேதி அங கிருந்து புறப்பட்டு 23-ம் தேதி பத்மனாபபுரம் வந்தடைகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT