இருமாநில நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திாி விழாவுக்காக பலத்த பாதுகாப்புடன் குமாி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் அடுத்த மாதம் 7-ம் தேதி கொண்டு செல்லப்படுகிறது.

Advertisment

குமாி மாவட்டம் மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்ட மக்கள் இணைந்து அரசு மாியாதையுடன் பெரும் விமா்சையாக நடத்தப்படும் நவராத்திாி விழாவுக்கான சுவாமி விக்ரகங்கள் பவனி விழா தென் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் தலைநகரமாக பத்மனாபபுரம் இருந்த போது அரண்மனை மண்டபத்தில் நவராத்திாி விழா நடத்தப்பட்டது.

Advertisment

kerala

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தற்போது இந்த விழா திருவனந்தபுரம் அரண்மனையில் ஆண்டுத்தோறும் பெரும் விமா்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக குமாி மாவட்டம் சுசிந்திரம் கோவிலில் இருந்து முன்னுதித்த நங்கை, குமாரகோவில் வேளிமலை குமாரசுவாமி, பத்மனாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய மூன்று சாமி விக்ரகங்கள் கேரளா மற்றும் தமிழக போலிசின் பலத்த பாதுகாப்புடன் அடுத்தமாதம் 7-ம் தேதி திருவனந்தபுரத்துக்கு கால் நடையாக ஊா்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

Advertisment

அப்போது வழி நெடுகிலும் பொது மக்கள் திரண்டு நின்று பூஜைகள் செய்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பாா்கள். சுவாமி விக்ரகங்கள் புறப்பாடு நிகழ்ச்சி பத்மனாபபுரம் அரண்மனையில் அன்று காலையில் நடக்கிறது. இதில் கேரளா அமைச்சா்கள் மற்றும் மத்திய மந்திாி பொன் ராதாகிருஷ்ணன் இருமாநில அறநிலையத்துறை அதிகாாிகள் பொது மக்கள் என ஏராளமானோா் கலந்து கொள்கின்றனா்.

பின்னா் இந்த சுவாமி விக்ரகங்கள் 19-ம் தேதி விஜயதசமி முடிந்து 21-ம் தேதி குமாி மாவட்டம் புறப்பட்டு வருகிறது. இந்த விழா இதுவரை இருமாநில நல்லுறவு விழாவாகவே நடந்து வருகிறது.