ADVERTISEMENT

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்! அரசு ஊழியர் சங்கம் தீர்மானம்!!

08:09 AM Dec 11, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவைக் கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை (டிச. 10) நடந்தது. மாவட்டத் தலைவர் முருக பெருமாள் தலைமையில் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகை, ஒப்பளிப்பு விடுப்பு ஊதியம் பெறுதல்; துறைவாரியாக அழைத்துப்பேசி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்தல்; வேலை நியமன தடைச்சட்டத்தை திரும்பப் பெற்று, காலிப்பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்; ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் பாதிக்கப்பட்ட 5068 பேரை பாதுகாக்க வேண்டும்; தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை, அவுட்சோர்சிங் முறையிலான நியமனங்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனங்களை ரத்து செய்துவிட்டு, அனைத்துப் பிரிவு ஊழியர்களையும் காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, துணைத்தலைவர்கள் முத்துக்குமார், திருவேரங்கன், பழனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT