ADVERTISEMENT

'தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -வானிலை ஆய்வு மையம் தகவல்!

01:16 PM Oct 31, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, இராமநாதபுரம், நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விரகனூர் அணை (மதுரை)- 10 செ.மீ., திருமங்கலம் (மதுரை), மதுரை விமான நிலையம் தலா 8 செ.மீ., வாலிநோக்கம் (ராமநாதபுரம்), வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது” இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT