ADVERTISEMENT

தரம் இல்லாத தமிழக பொறியியல் கல்லூரிகள்... கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்!

12:33 PM May 10, 2019 | santhoshb@nakk…


தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டுந்தோறும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளி வருகின்றனர். ஆனால் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களில் சுமார் 50% குறைவான மாணவர்களே வேலை வாய்ப்பை பெறுகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலையைத் தேடியும் , அரசு வேலை வாய்ப்பை தேடியும், படிப்பிற்கு சமந்தம் இல்லாத வேலையில் இளைஞர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதற்கு அனைவரும் பொதுவாக கூறும் காரணம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் உட்கட்டமைப்பு இல்லாததாலும் , கல்லூரிகள் வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தராததாலும் , இதில் இரண்டுமே இல்லாத கல்லூரிகளுக்கு தமிழக அரசு , அண்ணா பல்கலைக்கழகம் , பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் வழங்கியதே முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT


அதே போல் தமிழக அரசின் தொழிற்துறை அமைச்சகம் வேலைவாய்ப்புகளை உருவாக்காததும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சிண்டிகேட் கமிட்டி குழு தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை சுமார் 30% உயர்த்தவும் , அதாவது பொறியியல் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூபாய் 20,000 வரை உயர்த்த இந்த குழு முடிவு செய்து அது தொடர்பான செய்திகளும் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் மற்றும் கல்வியின் தரம் , வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை அண்ணா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தத் தயாரா? மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறாதது ஏன்? பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை பட்டியல் ஒரு பொய் பட்டியலா? என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளின் நடப்பு ஆண்டு முதல் கல்வி கட்டணத்தை உயர்த்தி அம்மாநில உயர்கல்வித்துறை அறிவிப்பாணையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசைப் பின்பற்றி தமிழக அரசும் , அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து இத்தகைய முடிவை அமைதியாக எடுத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT