ADVERTISEMENT

"தமிழக உரிமைகளை விட்டுத் தர மாட்டோம்"- துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம்!

01:08 PM Apr 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தமிழகத்தின் உரிமைகளையும் தமிழக மக்களின் நலன்களையும், யாருக்காகவும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது எனத் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழக பட்ஜெட்டின் போது நான் கூறியதில் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு, அப்போது துணை முதல்வர் மத்திய அரசை விமர்சித்தார். தற்போது நிலை மாறி விட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியது முற்றிலும் தவறானது.

ஒவ்வொரு ஆண்டும் நிதிக்குழுப் பரிந்துரை அடிப்படையில் மத்திய வருவாயில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி அளிக்கப்படும் என்பதை மத்திய அரசு குறிப்பிடும், அதன்பின் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் இந்த நிதியை மத்திய அரசு, மாநிலங்களுக்கு விடுவிக்கும். ஏற்றத்தாழ்வுகள் இருப்பின் முந்தைய ஆண்டு தணிக்கைத்துறை தலைவரால் சான்றிளிக்கப்பட்ட இறுதி வருவாய் ஈட்டல் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில் விடுவிக்க வேண்டிய தொகைகள் சரிசெய்யப்படும்.


அந்த அடிப்படையில் தான் 2019- 20 ஆம் ஆண்டு திருத்திய மதிப்பீடுகளில் தமிழகத்துக்கு வர வேண்டிய வருவாய்ப் பங்கு தொகை குறைந்து விட்டது இதற்கும் 15- ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படிகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

தமிழக மக்களுக்கும் ஒரு போதும் அநீதி ஏற்படக் கூடாது என்பதுதான் எங்களின் கொள்கை அதிலிருந்து நாங்கள் சிறிதும் பின்வாங்கவில்லை; பின்வாங்கவும் மாட்டோம். தமிழக அரசின் 2020- 21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 15- ஆவது நிதிக்குழு பரிந்துரையின் மீது தமிழக அரசு தன் நிலையை தெளிவாக எடுத்து வைத்துள்ளது. இந்திய நாடும் தமிழகமும் கொடூரமான கரோனா நோயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்குச் செய்ய வேண்டிய உடனடி பணிகள் குறித்து கவலைப்படாமல் பல முறை தெளிவுபடுத்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து தேவையில்லாத சர்ச்சைகளை மீண்டும் மீண்டும் கிளறுவது கண்டிக்கதக்கது.' இவ்வாறு துணை முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT