ADVERTISEMENT

ஏழு பேர் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு!

12:26 PM Nov 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்யும்படி அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையது அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.

அப்துல்கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கை பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும்.

எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு தி.மு.க. உட்பட அரசியல் கட்சியினர் அழுத்தம் தரும் நிலையில், கே.எஸ்.அழகிரி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT