ADVERTISEMENT

பிரகாஷ்ராஜ் எல்லாம் ஒரு தலைவரா? -தமிழிசை

01:57 PM May 05, 2019 | kalaimohan

டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பிடித்துக் கொண்டனர் என்ற ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கருத்து குறித்த கேள்விக்கு கேட்கப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த அவர்,

ADVERTISEMENT

டெல்லி மக்களாக இருந்தாலும், டெல்லியில் வாழுகின்ற தமிழக மக்களாக இருந்தாலும், டெல்லியில் வாழுகின்ற தென்னிந்திய மக்களாக இருந்தாலும் அவர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்ததான் இந்த முயற்சி.

ஒன்றாக சகோதரர்களாக தலைநகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் ஒரு மாநிலத்தைச் சார்ந்தவர்களை மட்டும் காழ்ப்புணர்ச்சியோடு பேசும் பொழுது அதை மாற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் இதற்கு முன்னால் இதே பிரித்தாளும் முயற்சி செய்து மதத்தினால், இனத்தினால், மொழியால் பிரித்து அதன் மூலம் அதிக வாக்குகளை பெறுவதைப் போல கெஜ்ரிவால் இன்று நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறார்.

நிச்சயமாக அது தோல்வி அடையும். நேற்று பிரச்சாரத்திலேயே பார்த்திருப்பீர்கள் எவ்வாறு எதிர்ப்பு கிளம்பியது என்று. சகோதரர்களாக தலைவர்கள் வாழுகின்ற தலைநகரில் தென்னிந்திய மக்களும் வட இந்திய மக்களும் ஒன்றாக இந்திய மக்களாக வாழ்கின்ற நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியை கெஜ்ரிவால் செய்கிறார். அது நிச்சயமாக பலனளிக்காது.

ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் பிடித்துள்ளதால் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். மேலும் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பிடித்துக் கொண்டனர் என்ற ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் பதிவிட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு

பிரகாஷ்ராஜ் எல்லாம் ஒரு தலைவராக அவருடைய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் வேறு சொல்ல வேண்டுமா. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை கெஜ்ரிவால் கேள்விக்கான பதில் சொல்லலாம் பிரகாஷ்ராஜ் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT