ADVERTISEMENT

இனி தமிழர்கள் சாட்சிகளாக இயங்கமாட்டார்கள்! - கமல்

12:52 AM May 29, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி சீல் வைத்தார்.

இது குறித்து 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்,

’’சரியான நேரத்தில் மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட்டிருந்தால் தேவையற்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை அரசு எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். வெறும் சாட்சிகளாக, திணிக்கப்பட்ட செய்திகளின் கைதிகளாக இனி தமிழர்கள் இயங்கமாட்டார்கள். நாம் விரும்பும் மாற்றமாக மாறத்துவங்கிவிட்டோம்.

தமிழக அரசியலின் புதிய பொழிப்புரையை தூத்துக்குடி எழுதிவிட்டது. தமிழகமே அதை பின்பற்றி இழந்த அரசியல்மாண்பை மீட்டெடுக்கவேண்டும். அரசியல்வாதிகளின் தேவைக்கான காரணத்தை,புதிய பாடமாக கற்றுத்தந்துள்ளது இப்போராட்டம். இக்கல்வி கற்று, மக்கள் நீதி மய்யம் பள்ளியாய் மாறி வீதிதோறும் இச்செய்தியை பரப்பும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு,மக்கள் வலிமையின் இன்னுமோர் பேருதாரணம். அனைத்து அரசியல் கட்சிகளும் சிரம் தாழ்த்தி ஏற்க வேண்டிய பாடம். களத்தில் பலியான தியாகிகளை போற்றுவதோடு இல்லாமல் பாடமும் கற்கவேண்டும். ’’என்று பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT