Tuticorin district school, college holiday notice

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அதே சமயம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாகத்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் (21.12.203) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் தென்காசி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் நாளை (21.12.2023) வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னதாக,திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும்முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும்வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாகப்பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும்மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.