ADVERTISEMENT

தலைமை செயலக ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு - கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு

04:55 PM Jun 01, 2019 | rajavel

ADVERTISEMENT

தலைமை செயலக ஊழியர்கள் உடை அணிவது தொடர்பாக திருத்தங்கள் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT




இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் உடைகள் இருக்க வேண்டும்.
பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டும் அணிய வேண்டும். சேலையை தவிர மற்ற உடைகளை அணியும்போது துப்பட்டாவை சேர்த்து அணிவது அவசியம்.

ஆண் ஊழியர்கள் அனைவரும் பேண்ட், ஷர்ட் அணிய வேண்டும். டீ ஷர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும்போது ஆண் ஊழியர்களாக இருந்தால் முழுக்கையுடன் கூடிய கோட், டை அணிய வேண்டும். அடர் வண்ணத்துடன் கண்களை பறிக்கும் நிறத்தில் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT