ADVERTISEMENT

"கிராமப் புறங்களில் இயற்கை வளத்தைப் பாதுகாத்தால் நிலையான வாழ்வாதாரத்தை எட்ட முடியும்"-  நபார்டு வங்கி மண்டல முதன்மை மேலாளர் பேச்சு!

08:33 PM Aug 22, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில் கிராமங்களில் நீடித்த வாழ்வாதாரம் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மையத்தின் இயக்குனர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சார் ஆட்சியர் மதுபாலன், பல்கலைக் கழக பதிவாளர் ஞானதேவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் கருத்தரங்கில் நபார்டு வங்கியின் மண்டலப் பொதுமேலாளர் வெங்கடகிருஷ்ணா கலந்து கொண்டு கருத்தரங்கு குறித்த மலரை வெளியிட்டார்.

ADVERTISEMENT

பின்னர் பேசிய நபார்டு வங்கியின் மண்டலப் பொதுமேலாளர் வெங்கடகிருஷ்ணா, "கிராமப் புறங்களில் நல்லதொரு சூழல் நிலவுவதால் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பைப் பெருக்குவது. மேலும் அங்கேயுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாத்து அவற்றின் பலன்களை அனைவரும் கிடைக்கும்படி செய்தால் கிராமப் புறங்களில் வெகு விரைவில் நிலையான வாழ்வாதாரத்தை நீண்ட காலத்திற்கான வளர்ச்சியையும் வெகு விரைவில் எட்ட முடியும்" எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வேளாண் பேராசிரியர் ராஜ்பிரவின், வேளாண்மை வல்லுநர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள், சுய உதவிக்குழு பெண்கள், மாவட்ட அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் தூய்மை கிராம ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்றுநர்கள், தோட்டக்கலை உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் சண்முகம், கடலூர் மாவட்ட இயற்கை வேளாண் விவசாயி ரங்கநாயகி, முகையூர் ஊராட்சி மன்றத் தலைவர் இளம்பரிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில், அண்ணாமலை பல்கலைக் கழக ஊரக வளர்ச்சி மையம் முகையூர் கிராமத்தைத் தத்தெடுத்து முன்மாதிரி கிராமமாக நிறுவுவதற்கு திட்டங்கள் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கருத்தங்கில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் மற்றும் எண்ணெய்கள், வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டியிருந்தது. இதனை கருத்தரங்கில் கலந்துக் கொண்டவர்கள் அதனை வாங்கிச் சென்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT