ADVERTISEMENT

வைகோ மீதான சிறைதண்டனை நிறுத்திவைப்பு!!

03:06 PM Jul 18, 2019 | kalaimohan

தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

தி.மு.க ஆட்சி காலத்தில் 2009ஆம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அந்த வழக்கின் மீதான விசாரணை முடிவில் சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 5 ஆம் தேதி அவருக்கு 1 வருடம் சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று பிற்பகல் 2.15 க்கு விசாரணைக்கு வந்தது. வைகோவின் மேல்முறையீட்டு மனு மீது ஆயிரம்விளக்கு காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேசவேண்டும் என அறிவுறுத்தி, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும்வரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT