vaiko

Advertisment

மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார்.

Advertisment

அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர்மீது தேசத்துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற்று வருகிறது.

இந்நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது.