ADVERTISEMENT

“கல்வி மூலம் வாழ்க்கையைப் பாருங்கள்”  - சூர்யா நெகிழ்ச்சி

12:34 PM Jul 16, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் இன்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் சூர்யா பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, “எல்லோருக்கும் சமூகப் பொறுப்பு, சமூக அக்கறை இருக்க வேண்டும்; ஒவ்வொருவருக்கும் உதவி செய்தால் அது வேர் போல் பரவும். எல்லாருக்கும் கல்வி முக்கியம். கல்வி மூலமாக வாழ்கையைப் பாருங்கள்; வாழ்க்கை மூலமாகக் கல்வியைப் பாருங்கள்; வாழ்நாள் முழுவதும் கல்வியே முக்கியம். நம் சமுதாயத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. சாதி மதம் எல்லாவற்றையும் கடந்து நாம் கல்வி மூலம் தான் வாழ்கையைப் பார்க்கப் போகிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் அறிவியலுக்கும், வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதைக் கல்விதான் சொல்லிக் கொடுக்கிறது. அகரம் மூலம் 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 வருடங்கள் ஆனது; ஆனால் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிக்கும் போது கடந்த 3 வருடங்களின் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்தது. அகரத்தின் நோக்கமே அனைவருக்கும் சமமான கல்வியைக் கொடுப்பது”எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT