ADVERTISEMENT

பேனர் வைக்க தடைகோரிய ட்ராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி

11:36 AM Nov 15, 2019 | kalaimohan

விதிமீறி வைக்கப்பட்ட பேனர் விபத்துக்களில் கோவையில் ரகு என்ற இளைஞரும், சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற ஐடி பெண் ஊழியரும் உயிரிழந்த நிலையில் தடையை மீறி பேனர் வைக்கக்கூடாது என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், நீதிமன்றமும் கருத்து தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆனால் அண்மையில் தமிழகத்தில் சீன அதிபர் வருகைக்காக தமிழக அரசு பேனர் வைக்க நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதிகோரி மனுதாக்கல் செய்து அனுமதியையும் பெற்றது. ஆனால் விதி மீறி பேனர் வைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு நல்ல தீர்வை வழங்கவேண்டும் எனவும், தமிழக அரசு பேனர் வைப்பதற்கு பெற்றிருக்கும் சிறப்பு அனுமதியை தடைசெய்யவேண்டும் இல்லையெனில் இது மற்ற அரசியல் கட்சியினருக்கு தவறான முன் உதாரணமாக அமையும் எனவும் ட்ராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பேனர் வைக்கலாமா இல்லையா என்பது அரசின் உரிமை சார்ந்த முடிவு அதில் தலையிட முடியாது. இந்த வழக்கிற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக்கூறி ட்ராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT