உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மாஹாலை மத்திய அரசு பாதுக்காக்க முடிவில்லை என்றால் மூடிவிடுங்கள் அல்லது இடித்து தள்ளிவிடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

​​​​​taJmahal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தாஜ்மஹாலை சுற்றி தாஜ் காரிடார் என்ற பெயரில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால் ஏற்படும் காற்று மாசுபட்டால் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் செம்பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது. இதனை தொடர்ந்து தாஜ்மஹாலை மத்திய அரசுபராமரிக்க தவறியதாகபல பொதுநலன் வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்துள்ள நிலையில் அந்த வழக்குகளை மதன் பி லோகூர் மற்றும் தீபக் மிஸ்ரா அமர்வு இன்று விசாரித்தது. அப்போது உலக அதிசயமாக கருதப்படும் தாஜ்மஹால் மத்திய அரசால் பராமரிக்கப்படுகிறதாஎன்ற கேள்வி எழுந்தது. அப்போதுநீதிபதிகள் குறிப்பிடுகையில்,

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

உலக அதிசயமாக கருதப்படும் தாஜ்மஹாலை நாம் எதிர்காலத்தில் இழந்துவிட்டால் அந்தஇழப்பு நாம் நாட்டிற்கான இழப்பு மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்து உலக அதிசயத்தை காண விரும்பும் அனைவருக்கும் இழப்பே. இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு பார்த்தால்மத்திய அரசு தாஜ்மஹாலை பாதுகாக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா? இல்லையா?என்ற கேள்வி எழுகிறது என்று நீதிபதிகள்குறிப்பிட்டனர்.

மேலும் தாஜ்மஹாலை பாதுக்காக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும். இல்லையெனில் தாஜ்மஹாலை இழுத்து மூடிவிடலாம் அல்லது இடித்து தள்ளிவிடலாம் என மத்திய அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.