ADVERTISEMENT

கலைஞர் ஒரு சகாப்தமாகவே வாழ்ந்தவர்: எஸ்.சுதாகர் ரெட்டி

06:41 PM Aug 30, 2018 | rajavel



கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் சென்னையில் வியாழக்கிழமை மாலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி பேசுகையில்,

ADVERTISEMENT

தமிழக மக்களின் பேரன்மை பெற்றவர் கலைஞர். அரசு நிர்வாகத்தில் தமிழை ஆட்சி மொழியாக செயல்படுத்தினார். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தியவர் கலைஞர். உலகின் பழமையான மொழியான தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். கலைஞர் ஒரு சகாப்தமாகவே வாழ்ந்தவர். தமிழில் படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளில் இருபது சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர்.


சமூக நீதிக்காக மண்டல் கமிசனை செயல்படுத்துவதில் முக்கிய சிற்பியாக திகழ்ந்தவர். வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கச் செய்தவர் கலைஞர். மக்கள் நலனுக்காக முன்னோடி திட்டங்களை நிறைவேற்றியவர். கூட்டாட்சி கொள்கை, மக்களின் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் உறுதியுடன் செயல்பட்டவர் கலைஞர். இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT