ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம்!

06:14 PM Sep 27, 2019 | kalaimohan

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 200 மதிப்பெண்ணில் 100 கேள்விகள் பொது அறிவாகவும், 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என மொழித்தாளகவும் இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொதுஅறிவு வினவாகவும், 25 வினாக்கள் திறனறி வினவாகவும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

அதேபோல் முதல்நிலை தேர்வு குரூப் 2 விற்கு மட்டும்தான் இருந்தது. குரூப் 2 ஏ தேர்வில் ஆப்ஜெக்டிவ் டைப் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது குரூப் 2 ஏவுக்கும் முதல்நிலை தேர்வு எழுதும்படியாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT