கடந்த மார்ச் மாதம்நடந்து முடிந்த குரூப் ஒன் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250],
[728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கடந்த மார்ச் நடந்து முடிந்த குரூப் ஒன் தேர்வை 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதற்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையில் 9050 பேர் மெயின் தேர்விற்கு தகுதியாகினர். ஆனால்இந்த தேர்வில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், குரூப் ஒன் தேர்வே குளறுபடிகளுடன் நடந்துள்ளதாகவும்எனவே இந்த தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இன்று நடந்தஇந்த வழக்கின் விசாரணையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வில் இடம்பெற்ற200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானது என ஒப்புக்கொண்டு இது குறித்து விளக்கமளிக்க கால அவகாசம் தேவை என முறையிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் போட்டி தேர்வுகளில் தவறான கேள்விகள் கேட்பதைசாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து சரியான விளக்கம் தேவை என தெரிவித்து இதுகுறித்து வரும் திங்கள் கிழமைடிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.