ADVERTISEMENT

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றாரா சுபஸ்ரீ ? உண்மை நிலவரம்!

12:16 PM Sep 14, 2019 | Anonymous (not verified)

சென்னை, பல்லாவரம் பகுதியைச் சார்ந்த இளம்பெண் சுபஶ்ரீ விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது . சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், இருசக்கர வண்டியில் பயணித்த சுபஶ்ரீயின் மீது சரிந்து விழுந்ததால், அவர் தடுமாறி தரையில் வீழ்ந்துள்ளார். அப்போது பின்னாடி வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியதில் உடல் நசுங்கி உயிரிழிந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு அரசியல் கட்சியினர் அவர்களது கட்சியினரிடம் பேனர் வைப்பதற்கு தடை விதித்து வருகின்றனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அதே போல் நேற்று சமூக வலைத்தளங்களில் சுபஸ்ரீ ஹெல்மெட் அணியாமல் சென்றதால் உயிரிழிந்தார் என்ற செய்தி பரவியது. இந்த செய்திக்கு போலீஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதோடு, பேனர் பிரிண்ட் செய்து கொடுத்த கடைக்கும் சீல் வைத்துள்ளோம். மேலும் சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்து சென்றிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என சமூக வலைத்தளங்களில் சிலர் செய்தி பரப்பிய நிலையில், சுபஸ்ரீ ஹெல்மெட் போட்டு தான் பயணித்தார், அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழா பேனர் சுபஸ்ரீ மீது விழுந்ததால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார், அதன் பின்பு பின்னாடி வந்த தண்ணீர் லாரி அவரின் உடல் மீது ஏறியதால் அவர் உயிரிழந்தார் என போலீஸார் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT