சென்னை, பல்லாவரம் பகுதியைச் சார்ந்த இளம்பெண் சுபஶ்ரீ விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், இருசக்கர வண்டியில் பயணித்த சுபஶ்ரீயின் மீது சரிந்து விழுந்ததால், அவர் தடுமாறி தரையில் வீழ்ந்துள்ளார். அப்போது பின்னாடி வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியதில் உடல் நசுங்கி உயிரிழிந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு அரசியல் கட்சியினர் அவர்களது கட்சியினரிடம் பேனர் வைப்பதற்கு தடை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் இனிமேல் அஜித் படத்திற்கு பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ajith fans

Advertisment

அதில் "சாலைகளின் பேனர் கவிழ்ந்து சகோதிரி சுபஸ்ரீ என்கிற சகோதிரியின் இழப்பு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னால் நாம் சிந்தித்து செயல்பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகின்றது. இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம். அந்த சகோதிரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம்" என்று போஸ்டர் அடித்து உறுதிமொழி ஏற்றுள்ளனர். மேலும் தல அஜித் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும், பொது இடங்களிலும் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கின்றோம் என்று கூறியுள்ளனர். இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதனை மற்ற ரசிகர்களும் கடைபிடித்தால் நல்லா இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.