Youth lying on the railway tracks; Two Loss their live in train collision

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோவில் திருவிழாவைபார்த்துவிட்டு இளைஞர்கள் மூன்று பேர் ரயில்வே தண்டவாளத்தின் மீது படுத்து உறங்கியதில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது முத்துப்பேட்டை பகுதி. இந்த பகுதியை ஒட்டியுள்ள உப்பூர் ஆலங்காடு பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இரவு திருவிழாவை முன்னிட்டு அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதனைப் பார்ப்பதற்காக வந்த நாகை மாவட்ட மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் பாண்டி (22) என்ற இளைஞரும், உப்பூர் பகுதியைச் சேர்ந்து அருள் (16) கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (17) பேரும் திருவிழா முடிந்த பிறகு அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்தனர்.

அந்த நேரம் தாம்பரம் செங்கோட்டை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வந்துள்ளது. ரயில் வருவதைக் கண்டுசுதாரித்து எழுவதற்குள் ரயில் மோதி முருகன்பாண்டி, அருள் ஆகிய இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரத் என்பவர் மட்டும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவில் திருவிழா பார்க்க வந்த இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment