ADVERTISEMENT

தமிழக காவல்துறையில் சப்- இன்ஸ்பெக்டர் (SUB - INSPECTOR) பணி !

10:45 AM Mar 18, 2019 | Anonymous (not verified)

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சப் - இன்ஸ்பெக்டர் (Sub - Inspector) காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணை (08/03/2019) அன்று வெளியீட்டது. இதன் படி தமிழகத்தில் சுமார் 969 காலியிடங்கள் உள்ளதாகவும் , இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி : http://www.tnusrbonline.org/ ஆகும். இணையதள விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 20/03/2019 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 19/04/2019 .

ADVERTISEMENT

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பை (Any Degree) முடித்திருக்க வேண்டும் . மேலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு சுமார் 20% இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பத்தாரரின் வயது வரம்பு - 20 முதல் 28 வயதிற்க்குள் இருப்பவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். அதே போல் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 1000 பொதுப்பிரிவினருக்கு எனவும் , மற்ற அனைத்து பிரிவினர்கள் ரூபாய் 500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை இணைய வழி பணபரிமாற்றம் (Credit / Debit card , Rupay Card , Internet Banking)மூலம் செலுத்தலாம் என தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் அறியலாம். வேலை தேடி அலையும் தமிழக இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு!

ADVERTISEMENT

பி.சந்தோஷ் ,சேலம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT