Salem

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சேலம் மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்த 7 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் (எஸ்ஐ), வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகர காவல்கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த சிவக்குமார், வீராணத்திற்கும், பள்ளப்பட்டியில் இருந்த முரளி அன்னதானப்பட்டிக்கும், மதுவிலக்கு அமல் பிரிவில் இருந்த ஜெய்ஸ்ரீராம் கன்னங்குறிச்சிக்கும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த குணசேகரன் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

Advertisment

சேலம் மத்தியக் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த கலைவாணி, அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்திற்கும், நில அபகரிப்புத் தடுப்புப்பிரிவில் இருந்த முத்துசெல்வம் மத்தியக்குற்றப்பிரிவுக்கும், சூரமங்கலம் நுண்ணறிவுப்பிரிவு எஸ்ஐ கேசவன் பள்ளப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.