ADVERTISEMENT

நெகிழியை ஒழிப்போம்! மாணவர்கள் உறுதி!

12:01 PM Feb 09, 2019 | rajavel



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம், ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் அலாவுதீன் துவக்கி வைத்தார்.

ADVERTISEMENT



இந்த பேரணியானது கீழக்கரை காவல்நிலையத்திலிருந்து - கடற்கரை வரை மாணவ, மாணவிகள் கையில் பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ADVERTISEMENT

" இயற்க்கையை சீரழிக்கும் நெகிழியை ஒழிப்போம்
மீன்கள் முதல் மான்கள் வரை மாண்டுபோகும்
ஈக்கள் முதல் பூக்கள் வரை மலடாகும்
அத்தனை நதிகளும் நெகிழியால் வற்றிவிடும்
பாலீத்தீன் பைகளால் கால்நடைகள் தினம் தினம் தின்று மடிகிறது
பெண் சிசு கொலை போல் மண் சிசு கொலை பாலீத்தீன் பைகளால் உண்டாகிறது" என கோஷங்களை எழுப்பினர். மேலும் இதில் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம், இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.





Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT