/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_139.jpg)
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு, சைவ மாரியம்மன் கோவில் பின்புற பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சிவகுரு (15). 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்து தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரது பெற்றோர் 11 ஆம் வகுப்பில் முதல் குரூப் எடுக்கச் சொல்லி உள்ளனர். அப்போதுதான் மருத்துவ படிப்பில் சேர வசதியாக இருக்கும் என அவரது பெற்றோர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சிவகுருவோ ஆர்ட்ஸ் (கலை அறிவியல்) குரூப்பில் சேர விருப்பம் தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக சிவகுரு மனக் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவுதிடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சிவகுரு இறந்து விட்டதாகத்தெரிவித்தனர். இதனைக் கேட்டு அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)