செவ்வாய் கிரக ஆய்விற்கு அனுப்பப்படும் விண்கலமான ரோவரில் தங்களது பெயர்களை பொறிக்க பதிவு செய்துள்ளனர் கிராமத்து மாணவர்கள் இருவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/நாசா வின்வெளி மையம் அனுப்பவுளள ரோவர் விண்கலத்தில் பெயற் பொறிப்பதற்கான போர்டிங் பாஸ்.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கூத்தன்வயல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன்கள் நிலநவசிகன் மற்றும் திகர்பூவன். ஆர் எஸ் மங்கலம் தாலுகாவில் தனியார் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் மார்ஸ் 2020 ரோவர் என்கின்ற விண்கலத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அனுப்ப உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்திருந்தது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் இவ்விண்கலம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரோவர் விண்கலத்தில் தங்களது பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பையும் நாசா வழங்கியிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/திகர்பூவன்.jpg)
திகர்பூவன்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/நிலநவசிகன்..jpg)
நிலநவசிகன்
பதிவு செய்யப்பட்ட அனைவரின் பெயர்களையும் நாசா கலிபோர்னியா, பாஸ்டோனாவில் உள்ள நாசாவின் ஜெட் புரொபல்சன் ஆய்வுக் கூடத்தில் உள்ள நுண்கருவிகள் ஆய்வகத்தில் எலெக்ட்ரான் கதிர்வீச்சைப் பயன்படுத்தி பெயர்களை சிலிகான் சிப்பில் பொறித்து சிப் கண்ணாடியால் மூடப்பட்டு ரோவரில் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் உலகம் முழுவதிலிருந்து 1கோடிக்கும் மேலானோர் பதிவு செய்துள்ள நிலையில். இந்தியாவில் இருந்து மட்டும் 15.7லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களம் தாலுகா, உப்பூர் அருகே கூத்தன்வயல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன்கள் நிலநவசிகன், திகர்பூவன் ஆகிய இரண்டு மாணவர்கள் பெயர்களும் அடக்கம்.! இதனால் இக்கிராம மக்கள் பூரிப்படைந்ததோடு மட்டுமில்லாமல் விண்கலம் ஏவப்படும் அந்நாளுக்காகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)