ADVERTISEMENT

'பழங்குடியின பெண்ணை ஆதரிக்காமல் சமூகநீதி என பேசி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்' -இபிஎஸ் பேச்சு!

05:24 PM Jul 02, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்புகளை குடியரசு தலைவர் வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று தமிழகம் வருகை புரிந்துள்ளார். சென்னை வந்துள்ள திரௌபதி முர்மு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்திக்க இருக்கிறார். இதற்காக நேற்றே அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்புவிடுத்திருந்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட இபிஎஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி,''அதிமுகவின் முழு ஆதரவுடன் திரௌபதி முர்மு இமாலய வெற்றி பெற துணைநிற்போம். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பழங்குடியின பெண்ணை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் சமூகநீதி எனப் பேசி மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். திமுக- காங்கிரஸ் சூழ்ச்சியால் 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மா வெற்றிபெற முடியவில்லை'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT