style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அமமுகவில் இருந்து விலகிய முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய 13வது ,15வது வார்டு உறுப்பினர்கள், போகலூர் ஊராட்சி ஒன்றிய 1வது வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 100 பேர் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதேபோல் அமமுக கட்சியிலிருந்து விலகிய ராமநாதபுரம் - கீழக்கரை நகரச் செயலாளர் சுரேஷ் தலைமையில் 200 பேர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.