ADVERTISEMENT

மே 25 ம் தேதி அனுப்பிய நோட்டீஸில்  மே 15 ந் தேதி கடனை கட்ட வேண்டும் என்று வங்கி உத்தரவு

03:35 PM May 26, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று தேர்தல் அறிக்கை கொடுத்தனர் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர்.

ADVERTISEMENT


தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வாக்காளர்கள் மத்தியில் பேசினார்கள். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் யாரும் விவசாயகடன் கட்ட வேண்டாம். வங்கிகள் விரட்டினாலும் 2 மாதம் வரை பணம் கட்டாதீங்க. நாங்க ஆட்சிக்கு வந்ததும் விவசாய நகைகடன் ரத்து செய்யப்பட்டு நகை உங்களுக்கு திருப்பித் தரப்படும் என்று பேசினார். இந்த பிரசாரம் தமிழகத்தில் எடுபட்டது. புயல் வறட்சி போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் வாக்குறுகளை நம்பி வாக்களித்தனர்.

அந்த வாக்குகளால் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று புலம்பும் நிலையில் தேர்தல் முடிவுக்காக காத்திருந்த வங்கிகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி வருகின்றனர். அதிலும் தப்பு தப்பாக கடிதம் அனுப்பியுள்ளனர். அதாவது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்கு நோட்ஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் முடிவு வெளியான நாளில் நோட்டிஸ் அனுப்பி மறுநாள் அதாவது மே 24 ந் தேதி நோட்டிஸ் கிடைத்துள்ளது. ஆனால் நோட்டிசை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். மே 25 ந் தேதி கையெழுத்துடன் 23 ந் தேதி அனுப்பியுள்ள நோட்டீஸ் மே 24 ந் தேதி கிடைத்தது. ஆனால் மே 15- ந் தேதிக்குள் பணம் கட்ட வேண்டுமாம். அவசரகதியில் நோட்டீஸ்களை தப்பு தப்பாக அனுப்பியுள்ளனர்.


இது குறித்து விவசாயிகள் கூறும் போது புயலில் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிட்டதால் மாவட்ட ஆட்சியர் ஒருவருடம் வரை கடன், வட்டி கட்ட விலக்கு அளிக்கப்படும் என்றார்கள். காங்கிரஸ் கட்சி கடன் ரத்து என வாக்குறுதி கொடுத்ததால் நம்பினோம். ஆனால் மீண்டும் பாஜக வே ஆட்சி க்கு வந்துவிட்டதால் காத்திருந்த வங்கிகள் தப்பும் தவறுமாக நோட்டிஸ் அனுப்பி உள்ளது என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT