Private company fire: 80 percent of goods destroyed by fire

Advertisment

கரூர் அடுத்த சுக்காலியூர் பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா சீட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் குடோனில் இருந்து கனரக வாகனத்தில் ஊழியர்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அருகிலுள்ள கட்டிடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்கு 80 சதவீத பொருட்கள் எரிந்து சாம்பலானது. அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் சுமார் 1மணி நேரம் போராடி முழுவதுமாக எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படாமல் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.