ADVERTISEMENT

ரெய்டு நாடகம் நடத்தி கதிர்ஆனந்த் வெற்றியை தடுக்க முயன்றுள்ளனர் -ஸ்டாலின் பேச்சு

11:17 PM Jul 29, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்களது கட்சி வேட்பாளர் கதிர்ஆனந்த்துக்காக பிரச்சாரம் செய்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பிரச்சார வேனில் நின்றவாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்கில் திமுக அமோக வெற்றிப் பெற்றது.

ADVERTISEMENT

இவர்களுடன் 38ஆவது எம்பியாக கதிர்ஆனந்த் வெற்றிப்பெற்று நாடாளுமன்றத்தில் சென்றிருப்பார். ஆனால் ரெய்டு எனும் நாடகத்தை நடத்தி வேலூர் தொகுதியின் தேர்தலை நிறுத்தி வைத்தனர். ஆனாலும் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கதிர்ஆனந்த் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்வார்.

தமிழக சட்டமன்ற வரலாற்றில் அதிக முறை வெற்றிப் பெற்ற தலைவர் கலைஞர். அவருக்கு பின்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் தான். அவரை போலவே கதிர்ஆனந்த் எம்பியாக வெற்றிப் பெற்று சிறப்பாக செயல்படுவார். வேலூர் மாவட்டத்தில் வாழும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள், சாலை வசதிகள், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவி தொகை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும்,

100 நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் முறைப்படுத்தபடும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வாணியம்பாடி நியூடவுன் சுரங்கபாதை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. கதிர்ஆனந்த் எம்பியாக வெற்றிப் பெற்றவுடன் நியூடவுன் சுரங்கபாதை பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு முடிக்கப்படும். இதே போல் வாணியம்பாடி பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று அவர் பேசினார்.

தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை, நிம்மியம்பட்டு, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் கதிர்ஆனந்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பிரச்சாரம் மேற்கொண்டார். வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு, இராமநாயக்கன்பேட்டை, மல்லகுண்டா உள்ளிட்ட ஊராட்சிகளின் நடந்து சென்று பெண்கள், முதியோர்கள், இளைஞர்களை சந்தித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இளைஞர்கள், பெண்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT