ADVERTISEMENT

தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்!

03:34 PM Dec 05, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள், அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, இலங்கையின் தலைமன்னார் அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்களை 10 விசைப்படகுகள் மீது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

நல்வாய்ப்பாக, தாங்கள் காயமின்றி வீடு திரும்பியதாகக் கூறும் தமிழ்நாடு மீனவர்கள், மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரைத் திரும்பியதால் ஒரு விசைப்படகிற்கு ரூபாய் 50,000 வரை நஷ்டம் ஏற்பட்டதாக, கவலைத் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக, இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதால், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT