ADVERTISEMENT

பிரித்து எரியப்பட்ட கடைகள்-கண்ணீர் விட்ட பெண்கள்!!

10:40 PM Sep 20, 2018 | raja@nakkheeran.in

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் வரும் நவம்பர் மாதம் 14ந்தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க வேலைக்காக அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ராஜகோபுரம் எதிரே கோயில் இடத்தில் பிளாஸ்டிக் கூரை போட்டு 50க்கும் மேற்பட்டோர் பூ, மாலை, தோங்காய், கற்பூரம் விற்கும் கடைகள், பொம்மைகள் விற்பது, வளையல் விற்கும் வியாபாரம் செய்துவந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த கடைகளை காலி செய்ய வேண்டும்மென கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. அவர்கள் கடைகளை காலி செய்யவில்லையென இன்று செப்டம்பர் 20ந்தேதி காலை 11 மணியளவில் 50க்கும் அதிகமான போலிஸார் ராஜகோபுரம் முன் குவிக்கப்பட்டு கடைகளை காலி செய்யலன்னா ஜேசிபி வச்சி இடிச்சி வாரிப்போட்டும் போய் வெளியே கொட்டிடுவோம் என மிரட்டினர்.


கடை வைத்துள்ள பெண்கள், 2 நாள் பொருத்துக்குங்க காலி செய்யறோம் என்றனர். கோயிலோட இடத்தில் ரோட்ல தானே கடை வச்சியிருக்கிங்க, காலி பண்ணச்சொன்னா காலி செய்துடனும், அதைவிட்டுட்டு சட்டம் பேசறிங்க என எகிறினர். சும்மா வச்சியில்லைங்க, தினமும் சாயந்திரம்மானா கடைக்கு 100 ரூபாய்ன்னு கோயில் ஆளுங்க வசூல் பண்ணாங்க. அதுக்கு பில் கிடையாது. இன்னைக்கு வந்து ஏதோ யோக்கியனுங்க மாதிரி கடையை பிரிச்சி தள்ளறாங்க என்றதும் அங்கிருந்த இணை ஆணையர் ஞானசேகரன் அந்த இடத்தில் இருந்து தூரச்சென்றார்.

போலிஸ் துணையோடு கடையை கோயில் ஆட்கள் பிரித்து தள்ள நாங்க சாலை மறியல் செய்யறோம் என 10 பெண்கள் கிளம்பினர். சாலை மறியல்ன்னு உட்கார்ந்திங்க. 15 நாள் உள்ள தூக்கி வச்சிடுவோம் ஜாக்கிரதை என போலிஸ் மிரட்ட அப்பெண்கள் பின்வாங்கினர். இறுதியில் மதியம் 3 மணியளவில் ராஜகோபுரம் முன்பிருந்த 50க்கும் மேற்பட்ட கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த 50 குடும்பத்தினருக்கும் இன்னும் 3 மாதத்துக்கு அங்கு கடை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாசம் எப்படி குடும்பம் நடத்தறதுன்னு தெரியல என கண்ணீர் விட்டார்கள் அங்கு கடை வைத்திருந்தவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT