/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_89.jpg)
காதலனுடன் தனிமையில் இருந்ததைப்பார்த்ததால் தனது இரு தங்கைகளையும் அக்கா கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாவட்டத்தில் உள்ள பால்ராய் பகுதியில் இரண்டு சிறுமிகள் இறந்து கிடந்துள்ளனர். அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லை எனவும் இவர்களின் அம்மா தீவனம் சேகரிக்கச் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர், வீட்டிற்கு வந்து பார்க்கையில் கதவு திறந்து கிடந்து, உள்ளே சிறுமிகள் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி சத்யபால் இருவரதுஉடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக அக்கா அஞ்சலியிடமும், குடும்பத்தினரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அக்கா அஞ்சலி(20) ஒருவரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது காதலுடன் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளார். அப்படி ஒருநாள் இரு தங்கைகளும் அக்கா அஞ்சலியை காதலனுடன் இருந்ததைப் பார்த்துள்ளனர். இதனால் அவர்கள் வெளியே சொல்லிவிடுவார்களோ என்று இருவரையும் மண் வெட்டியால் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த நிலையில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அக்கா அஞ்சலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)