Skip to main content

புதுக்கோட்டையில் ஜிஎஸ்டி குறித்த சிறப்புக் கருத்தரங்கம்

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
புதுக்கோட்டையில்
ஜிஎஸ்டி குறித்த சிறப்புக் கருத்தரங்கம்



புதுக்கோட்டை, ஆக.31- காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ‘தனியார்மயமும் ஜிஎஸ்டியும்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் தஞ்சை கோட்டத்தின் சார்பில் மயிலாடுதுறையில் நடைபெறும் 55-ஆவது மாநாட்டையொட்டி நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்கு கோட்டத்தலைவர் ஆர்.புன்னியமூர்த்தி தலைமை வகித்தார். முதல்நிலை அதிகாரிகள் சங்கம் சார்பில் ஜெ.விஜயராகவன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் என்.விஜயகுமார், முகவர் சங்கம் சார்பில் டி.தட்சிணாமூர்த்தி, எம்.கருணாநிதி, உணவக உரிமையாளர் சங்கம் சார்பில் சண்முக பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘தனியார்மயமும் ஜிஎஸ்டியும்’ என்ற தலைப்பில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் உரையாற்றினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் எம்.ஜியாவுதீன், ஆர்.ரெங்கசாமி, கே.கருப்பையா, எஸ்.பொன்னுச்சாமி, எஸ்.சங்கர், டி.சலோமி, துரை.நாராயணன், பி.ஆறுமுகம், வே.ஜெகன்நாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் எம்.அப்துல்ரகுமான் வரவேற்க, வரவேற்புக்குழுச் செயலாளர் எம்.தர்மலிங்கம் நன்றி கூறினார். கருத்தரங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்