ADVERTISEMENT

தரைக்காற்று அதிகமாக இருக்கும் -வானிலை ஆய்வு மையம்

06:00 PM Jun 13, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தரைக்காற்று வேகமாக வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT