ADVERTISEMENT

மாணவி சுபஸ்ரீ மறைவுக்கு இரங்கல்: நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல! - இராமதாஸ்

12:13 PM Jun 07, 2018 | Anonymous (not verified)

மாணவி சுபஸ்ரீ மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருந்த சுபஸ்ரீயால் நீட் தேர்வில் 24 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வினாக்களுக்கு சுபஸ்ரீ சரியான பதில் எழுதியிருந்த போதிலும், தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் காரணமாக சுபஸ்ரீ தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. செஞ்சி மாணவி பிரதீபாவின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியும், சோகமும் இன்னும் முழுமையாக தீராத நிலையில், சுபஸ்ரீயின் மறைவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தகைய தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும்.


நீட் தேர்வு நடத்தப்படும் விதமும், அதற்கான பாடத்திட்டமும் தமிழக மாணவர்களுக்கு முற்றிலும் புதிதாகும். அதுமட்டுமின்றி, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டால் மட்டும் தான் இத்தேர்வில் வெற்றி பெற முடியும் எனும் சூழலில், அதற்கான வாய்ப்பு இல்லாத மாணவச் செல்வங்கள் தோல்வியடைவது இயல்பு தான். இதில் மாணவச் செல்வங்களின் தவறு எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அதற்காக மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்வது தேவையற்றது. இனியும் எந்த ஒரு மாணவரோ, மாணவியோ நீட் தோல்விக்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது.

அதேநேரத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என மாணவச் செல்வங்களை தொடர்ந்து பலி வாங்கி வரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT