புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தில் சட்டமன்ற உறுப்பினரகள் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கும், சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திக்கு ஒரு நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாகவும் அரசின் விளக்கத்தை கேட்டனர்.

Advertisment

Two Years neet exam - Narayanasamy Opposition!

இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமி பதிலளிக்கையில், "ஆண்டிற்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தினாலும் ஆண்டுக்கு ஒருமுறை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், இந்த அறிவிப்பு தனியார் பயிற்சி மையங்கள் பயன்பெற உதவுமே தவிர மாணவர்களுக்கோ, கல்விக்கோ பயனளிக்காது" என்றார். இதனை புதுச்சேரி அரசு எதிர்க்கிறது. இது தொடர்பாக மனித வள மேம்பாட்டிற்கு கடிதம் எழுதப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

மேலும் இதேபோல் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தது ஏற்புடையது அல்ல என்றும், இதனை காங்கிரஸ் கட்சி முழுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்த முதலமைச்சர், இப்பிரச்சனைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.