தொடர்ந்து மாணவர்கள் சிலர் நீட் தேர்வின் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் , எனவே உடனடியாக நீட் தேர்வைக் ரத்து செய்யக் கோரி கோவையில் உள்ள அரசு கலை கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் வாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமப் புற மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாக, பலரும் பாதிக்கப்படுவதாகவும் எனவே உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.