ADVERTISEMENT

''மீன் விற்றதால் நாற்றம் வருகிறது...'' - பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி வேதனை!

06:25 PM Dec 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மீன் விற்று வரும் பெண்மணியை பேருந்தில் ஏறவிடாமல் நடத்துநர் தடுத்த சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகப் பேருந்து நிலையத்திலேயே அந்த பெண்மணி நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பல்வேறு மீனவ கிராமங்களை உள்ளடக்கிய கடலோர மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. அங்கு பிரதான தொழிலே மீன்பிடித்தல் மற்றும் மீன் விற்பனைதான். இந்நிலையில் குமரி மாவட்டத்தின் குளைச்சல் பகுதியில் உள்ள வாணியக்குடி எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற மூதாட்டி குளைச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்துவிட்டு தினமும் பேருந்தில் வீடு செல்வது வழக்கம். தலைச்சுமையாக மீன்களை விற்றுவிட்டு மாலை வேளையில் அரசு பேருந்தில் பயணித்துவந்த மூதாட்டி செல்வம் மீன் விற்பனை முடிந்து பேருந்தில் ஏறிய நிலையில் பேருந்து நடத்துநர், மீன் விற்றதால் நாற்றம் வருகிறது எனக்கூறி பேருந்திலிருந்து மூதாட்டி செல்வதை இறக்கிவிட்டுள்ளார்.

என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த மூதாட்டி பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று தனது ஆற்றாமையைக் கொட்டி தீர்த்துள்ளார். எத்தனை முறை இதுபோல் கீழே இறக்கிவிட்டு நடந்தே போயிருக்கேன்... இதெல்லாம் ஒரு நியாயமா நீதியா எனக் கண்ணீர் விட்டார். இதற்கும் அந்த பேருந்து ஓட்டுநர் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வாயிலில் ஒன்றும் தெரியாதது போல் நின்றுகொண்டிருந்தார். மூதாட்டியின் இந்த வேதனைக்குரல் குளைச்சல் பேருந்து நிலையத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

மூதாட்டியின் வேதனைக்குரலை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதனை சமூகவலைதளத்தில் பதிவிட தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது .

வீடியோ வைரலானதால் விரைவில் நீதி கிடைக்கும் என்றே நம்பியது 'குளைச்சல் பேருந்து நிலையம்'. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT