Fisherman incident CM MK Stalin financial support announcement

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் லெரின்ஷோ என்பவர் ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்நிலையில் உயிரிழந்த மீனவர் லெரின்ஷோ மறைவிற்குத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் எல்.லெரின்ஷோ கடந்த 9 ஆம் தேதி ஓமன் நாட்டின் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

Advertisment

உயிரிழந்த மீனவர் எல்.லெரின்ஷோ குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடுஅவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத்தெரிவித்துள்ளார்.