ADVERTISEMENT

'குழந்தைகள் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்!' - மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

06:12 PM Dec 07, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றால், கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு, அந்தந்த பள்ளிகளில் இலவசமாக அரிசியும், முட்டையும், பருப்பும் அரசு வழங்கி வருகிறது. அப்படி, தமிழக அரசு வழங்கி வரக்கூடிய அரிசியில் தரம் இல்லை என்றும், தரமில்லாத துர்நாற்றம் வீசக்கூடிய அரிசிகளை மாணவ-மாணவிகளுக்கு அரசு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், 'காக்கா முட்டை' போன்ற முட்டைகளை அரசு வழங்குவதாகவும், அதில் பல முட்டைகள் கெட்டுப்போய் உள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், கொடுக்கப்பட்ட தரமில்லாத அரிசி, முட்டைகளோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தி தமிழக அரசு, நல்ல அரிசியையும், முட்டையையும், பருப்பையும் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், அவர்களுடைய உடல் நலத்தில் அக்கறையும் செலுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT