
கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24/05/2021 முதல் மேலும் ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு 24/05/2021 காலை முதல் நடைமுறைக்கு வரும். பொதுமக்கள் நலன் கருதி இன்று (22/05/2021) இரவு 09.00 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை (23/05/2021) ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் திங்கட்கிழமை 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் அற்ற தீவிர ஊரடங்கை நடை முறைப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை காணலி வாயிலாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை முறையாக அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்க இருக்கின்றனர். காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக வினியோகிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.