ADVERTISEMENT

படப்பிடிப்பு ரத்து... விஜயை அழைத்துச் சென்ற அதிகாரிகள்... பரபரப்பு பின்னணி!

04:48 PM Feb 05, 2020 | kalaimohan

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "மாஸ்டர்" படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் வழங்கி, சிறிது நேரம் விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது காரில் அழைத்து சென்றுள்ளனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் இன்று மாலை 05.30 மணி வரை படப்பிடிப்பு நடத்த நிர்வாகம் அனுமதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிறுவனத்திற்குள் எட்டு நாள் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

அதிகாரிகள் விஜயை அழைத்துச் சென்றதால் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT