ADVERTISEMENT

ஷவர்மா உயிரிழப்பு எதிரொலி; பல இடங்களில் சோதனை; கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல்

04:29 PM Sep 19, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம், மாலை, இரவு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உணவகத்தில் உணவு சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அந்த தனியார் உணவகத்தில் உணவருந்திய அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தர்மபுரி பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் உள்ள அசைவ உணவகங்களில் ஷவர்மா உள்ளிட்ட உணவுகள் சமைக்கப்படும் இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு உணவுகள் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றித் தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ததோடு கெட்டுப் போன இறைச்சிகளைக் கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தனர். அதேபோல் கரூரிலும் துரித உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை சோதனையில் ஈடுபட்டனர். அங்கும் பல கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. இப்படி தமிழகம் முழுவதும் ஈரோடு, தேனி பல இடங்களில் அசைவ உணவகங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT