Shawarma food incident ... Two arrested!

Advertisment

ஆடம்பர உணவு பட்டியலிலிருந்த 'ஷவர்மா' பல இடங்களில் பிரதான உணவு என்ற இடத்தையும் பிடித்துள்ளது. தீப்பொறியில் வேகவைத்த இறைச்சியை பொடியாக்கி அதை ரொட்டியில் வைத்து சாப்பிடும் ஷவர்மாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி உண்ணுகிறார்கள்.

இப்படி பெரும்பாலான வீடுகளில் இரவு உணவாக மாறிவிட்டது ஷவர்மா. ஹோட்டல்களில் கம்பியில் சுழன்று தீ பொறியில் வெந்து கொண்டிருக்கும் இறச்சியைப் பார்ப்பவர்கள்அதை வாங்கி சாப்பிடத் தூண்டும். ஆரம்பத்தில் நகர்ப்புற மக்களிடம் பரவிய இந்த ஷவர்மா தற்போது கிராமப்புற மக்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரு டேஸ்டுக்காக சாப்பிட்டு வந்த ஷவர்மா இப்போது பசிக்காக வயிற்றை நிரப்பும் உணவாகவும் மாறிவிட்டது.

இந்தநிலையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கேரளா காசர்கோடு சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் - பிரச்சனா தம்பதியினரின் மகள் தேவநந்தா (17) அங்குள்ள அரசு பள்ளியில் +2 படித்து வந்தார். அவர் வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு ஹோட்டலில் சென்று ஷவர்மா வாங்கி சாப்பிட்டதோடு குளிர் பானமும் அருந்தியுள்ளார்.

Advertisment

food

பின்னர் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் தேவநந்தா வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் தேவநந்தா பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் அதே ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 10 க்கு மேற்பட்டோர் வாந்தி மயக்கம் எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவ, அந்த ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவர்கள் மற்றும் போலீசார் ஆய்வுகளை மேற்கொண்டதோடு ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த ஹோட்டலை அடித்து உடைத்ததோடு உரிமையாளரின் வாகனத்தையும் உடைத்தனர். இந்த சம்பவத்தில் ஹோட்டல் மேலாளர் அனஸ் மற்றும் ஷவர்மா மாஸ்டர் சந்தோஷ் ராய் இருவரையும் போலீசார் கைது செய்து இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.