ADVERTISEMENT

ரகசியம் காத்த ஓபிஎஸ் - நிர்மலா சீதாராமன் : போட்டு உடைத்த இபிஎஸ்!

10:38 AM Jul 26, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழக துணை முதல்வர் ஓபிஸ் சகோதரர் ஓ.பாலமுருகனுக்கு மேல்சிகிச்சைக்காக இராணுவ ஹெலிகாப்டரை அனுப்பியதற்காக இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமநுக்கு அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனம் வலுத்து வருகிறது.

ADVERTISEMENT

ஓபிஎஸ் தம்பி பாலமுருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த மாதம் சிகிச்சை பெற்று வந்தார். குடிநோயால் பாதிக்கப்பட்ட பாலமுருகனுக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அடையாறில் உள்ள குடி நோய் மீட்பு மையம், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை என பல இடங்களில் சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அவரால் அதில் இருந்து மீள முடியவில்லையாம்.

இந்த நிலையில் பாலமுருகனின் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு அது புற்றுநோயாக உருவெடுத்து ஆபத்தான கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அதற்காக சிகிச்சை எடுக்க மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே தொடர் சிகிச்சை அளித்தாலும் பாலமுருகன் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லையாம். அதன் பிறகே சென்னை அப்பல்லோவுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்தார்களாம்.


ஆம்புலன்ஸில் சாலை மார்க்கமாக போகலாம் என முடிவெடுத்தபோது, காரில் கொண்டு செல்லமுடியாது... உடம்பு தாங்காது ஹெலிகாப்டரில் தான் கொண்டு செல்லவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூற, உடனே ஏர் விமானம் ஏற்பாடு செய்ய தன் சகாக்களிடம் ஓபிஎஸ் கூற, அவர்களால் தனி விமானம் ஏற்பாடு செய்யாமுடியாமல் முழிக்க, ஓபிஎஸ்’தான் உடனடியாக நிர்மலா சீதாராமனைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ராணுவ பயன்பாட்டுக்கும், நாட்டின் உயரிய பதவியில் இருப்பவர்களும் பயன்படுத்தும் ராணுவ ஏர் ஆம்புலன்ஸை குடிநோயாளியான தனது தம்பிக்காகக் கொடுக்குமாறு கேட்டிருக்கிறார் ஓபிஎஸ். நிர்மலாவும் உடனடியாக , பன்னீரின் தம்பியை மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு போக ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

‘துணை முதல்வரின் தம்பி பாலமுருகன் நாட்டின் எந்த முக்கிய பதவியிலும் இல்லை. அவர் குடி நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில் அவரை மிலிட்டரி ஹெலிகாப்டரில் கொண்டு போனால், அது பல சர்ச்சைகளை உண்டாக்கும்’ என அதிகாரிகள் அப்போதே நிர்மலாவிடம் சொன்னார்களாம். ஆனால், நிர்மலாவோ, ‘என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டு நான் யாரை வேண்டுமானாலும் ராணுவ ஏர் ஆம்புலன்ஸில் அனுப்பலாம். நீங்க போங்க...’ என சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.

ஓ.பி.எஸ்-ன் தம்பி பாலமுருகனை ராணுவ ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு வந்த தகவல் நேற்றுவரை யாருக்கும் தெரியாது. நிர்மலாவும் சொல்லவில்லை. ஓபிஎஸ்-ம் சொல்லவில்லை. நேற்று வண்டலூரில் எடப்பாடி பழனிசாமி பேசும்போதுதான் இந்த தகவலை முதலில் போட்டு உடைத்தார். நிர்மலாவுக்கு நன்றி சொல்கிறேன் என்ற பெயரில் விஷயத்தை ஓபிஎஸ்-ம் உடைத்துவிட்டார்.

இதன்பின்னர், ஏர் ஆம்புலன்ஸில்தான் பாலமுருகனை கொண்டு வர வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தால், கோவையில் உள்ள கங்கா மருத்துவ மனையில் இதற்காக வாடகைக்கு ஏர் ஆம்புலன்ஸ் இருக்கிறது. அதில் கொண்டு வந்திருக்கலாம். அப்படி இல்லாமல், எப்படி ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்கள் என்று கேள்விக்கு மேல் கேள்வி எழுந்துள்ளது.

பிஜேபி தரப்பில் இருந்தோ, நிர்மலா தரப்பில் இருந்தோ இதுவரை இந்த புகாருக்கு விளக்கம் வரவில்லை. தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த காரணத்துக்காக ஓபிஎஸ், நிர்மலா இருவருமே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க ஆரம்பித்துள்ளது”

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT